திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து...
திருப்பதி
Tirupati | திருப்பதியில் உள்ள இலவச தரிசன கவுண்டர்களில் தேவஸ்தான ஊழியர்கள் உடன் பக்தர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். ஆந்திர மாநில அரசுக்கு எதிராக கோஷம் போட்டு போராட்டமும் நடத்தினர்.
திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. 3 நாட்களுக்குப் பின் நாளை ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் 25000 டிக்கட்டுகள் சீனிவாசம் கட்டிட வளாகம், பூதேவி கட்டிட வளாகம், விஷ்னு நிவாசம் கட்டிட வளாகம் ஆகியவற்றில் உள்ள கவுண்டர்களில் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை வாங்குவதற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பாதிக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. மேலும் நாளைய தினம் காலை கவுண்டர் திறக்கப்பட்டு நாளை மறுதினம் ஏழுமலையானை வழிபட டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் பக்தர்கள் எங்களுக்கு இப்போதே டோக்கன்கள் வழங்க வேண்டும் என்று கூறி அங்கு பணியில் இருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கவுண்டர் எதிரில் சாலையில் அமர்ந்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களைத் அப்புறப்படுத்தும் முயற்சியில் விஜிலென்ஸ் துறையினர்,போலீசார் அகியோர் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.