தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று வைகாசி மாத பெளவுர்ணமியை முன்னிட்டு இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட வாகனம் மண்டபத்தை அடைந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். கொட்டும் மழையிலும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களும் விடாது பெய்த மழையிலும் மாடவீதிகளில் காத்திருந்து ஏழுமலையானின் கருட வாகன சேவையை தரிசித்தனர்.
கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திருப்பதியில் பெளவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் உலா வருகிறார் மலையப்பசுவாமி. ஒவ்வொரு மாதமும் பெளவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கக் கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.