நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான். ஆனாலும் இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நாக சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் இன்று இரவு 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ராம அவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ண அவதாரத்தில் பலராமனாகவும், மகா விஷ்ணுவுக்கு படுக்கையாக ஆதிசேஷன் சேவை செய்து வருகிறார். இதன் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் ஏழுமலையான் பெரியசேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்துடன் அன்று திருக்கல்யாண மண்டபத்தில் 1 மணி நேரம் வரை சிறப்பு பூஜைகள், ஆரத்திகள் வழங்கி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகசதுர்த்தியையொட்டி இன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் ஏழுமலையான் பெரியசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலிக்கிறார் . திருப்பதியில் நேற்று 34,824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,650 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.