திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை மே மாதம் தரிப்பதற்கான டிக்கெட்டுகள் வினியோகம் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் துவக்கம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்டகால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 டேஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனையின் மூலம் கிடைக்கப்பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நேரில் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.inவெப்சைட் மூலம் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.