ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி: இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் முக்கிய மாற்றம்.. எண்ணிக்கை குறைப்பு!

திருப்பதி: இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் முக்கிய மாற்றம்.. எண்ணிக்கை குறைப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில்

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட சொர்க்கவாசல் தரிசனம் நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்கள் எண்ணிக்கை திருப்பதியில் குறைக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதற்காக திருப்பதியில் 9 இடங்களில் 90 கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மட்டுமே டோக்கன்களை வாங்கி தரிசனத்திற்கு செல்கின்றனர். எனவே கவுண்டர்கள் அமைக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை குறைத்த தேவஸ்தானம் தற்போது நான்கு இடங்களில் உள்ள 40 கவுண்டர்களில் மட்டுமே பக்தர்களுக்கு டோக்கன்களை வழங்கி வருகிறது.

எனவே பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள இரண்டாவது சத்திரம், விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் செயல்படும் கவுண்டர்களில் டோக்கன்களை வாங்கி ஏழுமலையானை இலவசமாக வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Tirumala Tirupati, Tirupathi, Vaikunda ekadasi