Home /News /spiritual /

திருப்பதியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு... டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு...

திருப்பதியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு... டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு...

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களும் சாமி தரிசனம் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது...

    ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையிலான தரிசன வசதி மீண்டும் துவக்கம். டோக்கன்கள் நாளொன்றுக்கு ஆயிரம் என்று எண்ணிக்கையில் 8ஆம் தேதிமுதல் ஆன்லைனில் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இம்மாதம் 8ஆம் தேதி முதல் மீண்டும் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையான் தரிசன வசதியை ஏற்படுத்தி கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு தேவையான டிக்கட்டுகள் இம் மாதம் 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் விநியோகம் செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11 மணி மணி முதல் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்னுரிமை தரிசனத்திற்கான டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் படிக்க...  மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா தொடங்கியது...

    இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் தேவஸ்தான இணைய தளத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும். ஒரு நாளைக்கு ஆயிரம் டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. டோக்கன் பெற்ற பக்தர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirupati

    அடுத்த செய்தி