முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

Tirupati | திருப்பதிக்கு தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், நாளை வெளியிடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதம் தோறும் இணையதளம் வாயிலாக அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்கான, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள், நாளை காலை 10:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

Also see... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசன நேரத்தில் மாற்றம்.. இன்று முதல் அமல்!

பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tirupati, Tirupati temple