ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

Tirupati | பக்தர்கள் தேவையான டிக்கெட்டுகளை தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் தினசரி 20,000 வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தை என தினமும் 60 முதல் 70,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இம்மாதம் 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupatibalaji.gov.in வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இம்மாதம் 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை திருப்பதி திருமலையில் அறைகள் தேவைப்படும் பக்தர்கள் நாளை காலை 10 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Online, Tirumala Tirupati, Tirupathi