ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி: ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி: ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளன...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 24 ஆம் தேதியான இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் பின்னர் தேர்வு செய்யப்படுவார்கள்.

  தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு உரிய தகவல் அவர்களுடைய மொபைல் போன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

  Also see... திருப்பதி லட்டின் சுவாரஸ்யம் நிறைந்த வரலாறு! |

  ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, தோல் உட்சவம் ஆகிய கட்டண சேவைகளில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே தரிசிக்க விரும்பும் பக்தர்கள் நாளை 25ஆம் தேதி தங்களுக்கு தேவையான டிக்கட்டுகளை தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tirupati