முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி மலையில் மாசி தெப்போற்சவம்.. மார்ச் 3ஆம் தேதி முதல் தொடக்கம்..!

திருப்பதி மலையில் மாசி தெப்போற்சவம்.. மார்ச் 3ஆம் தேதி முதல் தொடக்கம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tirupati | திருப்பதி மலையில் மார்ச் மாதம் மூன்றாம் தேதி துவங்கி ஏழாம் தேதி வரை  5 நாட்கள் ஏழுமலையானின் தெப்போற்சவம் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 நாட்கள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. உற்சவத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.

இதற்காக கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பம் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. உற்சவத்தின் முதல் நாளன்று சீதாதேவி சமேதராக ஸ்ரீராமர், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர் ஆகியோருடன் தெப்பத்தில் எழுந்தருளியும், இரண்டாவது நாளான நான்காம் தேதி அன்று கிருஷ்ணர், ருக்மணி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளியும் தெப்பக்குளத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

மூன்றாவது நாள் முதல் ஐந்தாவது நாள் வரை மூன்று நாட்களும் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

மூன்றாவது நாள் அன்று மூன்று முறையும், நான்காவது நாள் அன்று ஐந்து முறையும், ஐந்தாம் நாளன்று ஏழு முறையும் தெப்பத்தில் எழுந்தருளி இருக்கும் உற்சவ மூர்த்திகள் திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

Also see... திருப்பதி லட்டு வழங்குவதில் வருகிறது புதிய மாற்றம்... தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

தெப்போற்சவத்தை முன்னிட்டு மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் சகஸ்ரதீப அலங்கார சேவையும், 5,6, 7 ஆகிய தேதிகளில் கட்டணபிரமோற்சவம், சகசர தீப அலங்காரம் ஆகிய சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உற்சவ நாட்களில் மூலவர் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தோமாலை, அர்ச்சனை ஆகிய கட்டண சேவைகளில் பங்கு பெற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati