முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tirupati | திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான டிக்கெட்டுகள் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையானை வரும் மார்ச் மாதம் கட்டண சேவைகள் மூலம் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற தினசரி கட்டண சேவைகளில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த கட்டண சேவைகள் மூலம் மார்ச் மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.

அதேபோல் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்காக குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Also see...திருப்பதி கோயிலுக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி.. லட்டு, அறை மோசடிக்கு தேவஸ்தானம் வைத்த முற்றுப்புள்ளி!

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www. tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati