முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி லட்டு வழங்குவதில் வருகிறது புதிய மாற்றம்... தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

திருப்பதி லட்டு வழங்குவதில் வருகிறது புதிய மாற்றம்... தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு வழங்குவதில் பழங்கால முறையை பின்பற்றப்போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பின் லட்டு பிரசாதம் வாங்கி செல்வது அனைவரின் வழக்கம். சாமி தரிசன வாய்ப்பு கிடைக்க தவறினாலும் கூட லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்கள் தவறுவதே கிடையாது. அந்த அளவிற்கு ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தர்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இனி பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை  விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

செய்தியாளர் : புஷ்பராஜ் (திருப்பதி)

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati Devotees, Tirupati laddu, Tirupati temple