ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி லட்டு பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யமுடியுமா? - தேவஸ்தானம் விளக்கம்!

திருப்பதி லட்டு பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யமுடியுமா? - தேவஸ்தானம் விளக்கம்!

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

Tirupati | திருப்பதி லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்தால் தபால் அல்லது கொரியர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை இனி ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கலாம் எனவும், லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்தால் தபால் அல்லது கொரியர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த தகவலை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பரவி வரும் தகவல் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கேட்டபோது, இந்த தகவலை மறுத்த அதிகாரிகள், அந்த தகவல் முற்றிலும் தவறானது. இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம். அந்த தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் லட்டு பிரசாதத்தை மட்டும் முன்பதிவு செய்து வாங்க இயலாது’ என்றனர்.

Also see... திருப்பதி லட்டின் சுவாரஸ்யம் நிறைந்த வரலாறு!

மேலும் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான லட்டு பிரசாதங்களையும் முன் பதிவு செய்து திருப்பதி மலைக்கு வந்து கவுண்டர்களில் வாங்கி கொள்ளலாம். இதுதான் நடைமுறை என்றும் விளக்கமளித்தனர்.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Laddu, Tirupati