திருப்பதியில் கட்டண சேவை டிக்கெட்டுகள் பெற விருப்பம் தெரிவித்த பக்தர்களுக்கு இன்று மாலை குழுக்கள் மூலம் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள விஜயா வங்கி கவுண்டரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் ஏழுமலையான் கோவில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை மீண்டும் துவங்கி உள்ளது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று டிக்கெட்களை பெறுவதற்காக ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், டோலோட்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை உள்ளிட்ட சேவைகள் தினமும் நடைபெறும். அதற்காக ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெற இருக்கும் கட்டண சேவைகளில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த பக்தர்கள் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து வருகின்றார்.
இன்று மாலை 6 மணி அளவில் தங்கள் பெயர், விபரங்களை பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு கட்டண சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நடைபெறும் குழுக்கள் திருப்பதி மலையில் உள்ள மத்திய வரவேற்பு நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் எல்இடி திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். குலுக்கல் முறையில் கட்டண சேவைகளில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும் பக்தர்கள் மாலை பணம் செலுத்தி டிக்கட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமண தம்பதிகள், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மணமக்கள் ஆகியோர் திருமண பத்திரிக்கையை காண்பித்து ஒருநாள் முன்னதாக ஏழுமலையானின் கல்யாணம் உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு தேவையான டிக்கெட்டுகளை பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.