Home /News /spiritual /

Tirupati : திருப்பதிக்கு ஜனவரியில் செல்லும் பக்தர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி...

Tirupati : திருப்பதிக்கு ஜனவரியில் செல்லும் பக்தர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி...

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான ஜனவரி மாத டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. பக்தகள் ஆன்லைனில் புக் செய்யலாம்.

    கொரோனா நோய் தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக, தேவஸ்தானம் ஆன்லைனில் புக் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,  வரும் ஜனவரி மாதத்திற்காக புக்கிங் இன்று தொடங்குகின்றன. 

    ஜனவரி மாதம் 1ஆம் தேதி மற்றும் 13-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை உள்ள நாட்களில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு நாள் ஒன்றுக்கு 20,000 என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி 2-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மற்றும் 23ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆகிய நாட்களில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் நாளொன்றிற்கு 12000 என்ற எண்ணிக்கையிலும் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜனவரி 12, 13ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரையும், ஜனவரி 26 ஆகிய தேதிகளிலும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆன்லைன் சேவைகளான கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை உள்ளிட்ட சேவைகளுக்கான 5500 டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 9 மணி முதல் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... சகல சங்கடங்களையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

    மேலும் ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை திருப்பதி மலையில் உள்ள கவுண்டர்களில் மட்டுமே தங்கும் அறைகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... பூஜையின் போது மணி அடிப்பது ஏன் தெரியுமா?

    ஆன்மிக தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thirumala, Tirupati

    அடுத்த செய்தி