திருப்பதி இலவச தரிசனம் டோக்கன் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில்

ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய இலவச தரிசன டோக்கன் வினியோகம் திருப்பதியில் உள்ள சீனிவாசன் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

 • Share this:
  திருப்பதியில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகத்தில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய இலவச தரிசனம் டோக்கன்கள் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. எனவே மற்ற மாவட்டங்கள், மற்ற மாநிலங்கள் ஆகியவற்றை சேர்ந்த பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் திருப்பதிக்கு வரவேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  கொரோனா கட்டுப்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய இலவச தரிசன டோக்கன் வினியோகம் திருப்பதியில் உள்ள சீனிவாசன் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. பரிசோதனை அடிப்படையில் தினமும் 2,000 டோக்கன்கள் என்ற எண்ணிக்கையில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமே இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

  Also Read : சபரிமலையில் புரட்டாசி பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

  எனவே மற்ற ஊர்கள் மற்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனாலும் ஏதோ எண்ணத்தில் இலவச தரிசன டோக்கன் கிடைக்கும் என்று வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் ஆகியவற்றில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் வருகின்றனர்.

  தற்போது உள்ள நடைமுறையின் அடிப்படையில் ஆதார் அட்டைகள் ஆதாரமாக சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமே 2000 டோக்கன்ங்கள் தினமும் வழங்கப்படுகின்றன. எனவே வெளியூர் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும் வரை ஆந்திராவின் மற்ற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள் ஆகியவற்றை சேர்ந்த பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: