ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வார விடுமுறையான கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

  கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

  தங்க  இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 48 மணி நேரம் கழித்து இறைவனை வழிபட்டு வந்தனர். இதனால் விஐபி பக்தர்கள், சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கைவிடுத்திருந்தது.

  Also see... திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!

  இந்நிலையில், தற்போது கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பக்தர்கள் சிரமம் இன்றியும், வேகமாகவும் தற்போது சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tirupati