Home /News /spiritual /

Tirupati : திருப்பதியில் இருந்து பத்மாவதி தாயாருக்கு அன்பளிப்பு அனுப்பிய ஏழுமலையான்

Tirupati : திருப்பதியில் இருந்து பத்மாவதி தாயாருக்கு அன்பளிப்பு அனுப்பிய ஏழுமலையான்

திருப்பதி திருச்சானூர் பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அன்பளிப்புகளாக திருப்பதி மலையில் இருந்து மங்கல பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    திருப்பதி திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளமான பத்மசரோவரம் குளத்தில் பஞ்சமி நாள் ஒன்றில் பத்மாவதி தாயார் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ நிறைவு நாளன்று பத்மசரோவரம் திருக்குளத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்துவது வழக்கமான ஒன்றாகும்.

    அப்போது ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி புனிதம் அடைவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருக்குளத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே கோவில் முன் தற்காலிக திருக்குளம் ஒன்றை ஏற்படுத்தி அதில் கோவில் திருக்குளத்தின் புனித நீரை நிரப்பி பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்தப்பட உள்ளது. எனவே ஏகாந்தமாக நடத்தப்படும் பஞ்சமி தீர்த்த உற்சவத்தில் பக்தர்கள் நீராட இயலாது.

    இந்த நிலையில் பத்மாவதி தாயாரின் அவதார திருநாளை முன்னிட்டு திருப்பதி மலையில் இருந்து ஏழுமலையானின் அன்பளிப்புகளாக பட்டு சேலைகள், மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பிரசாதங்கள் ஆகிய மங்கல பொருட்கள் இன்று பத்மாவதி தாயாருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    மேலும் படிக்க... ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?

    இன்று அதிகாலையில் பத்மாவதி தயாருக்கு அனுப்பப்படும் மங்கள பொருட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அவற்றை யானை மீது ஏற்றி தேவஸ்தான அதிகாரிகள் பத்மாவதி தாயார் கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.

    அவற்றை பெற்றுக கொண்ட பின் பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அன்பளிப்பு பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து தற்காலிக திருக்குளம் அருகில் சக்கரத்தாழ்வார், உற்சவர் தாயார் ஆகிய இறை மூர்த்தங்களுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். பின்னர் சக்கரத்தாழ்வாரை தற்காலிக திருக்குளத்தில் நிரப்பப்பட்டு உள்ள புனித நீரில் 3 முறை மூழ்க செய்து பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்துவார்கள்.

    மேலும் படிக்க... வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

    இன்று மதியம் நடைபெற இருக்கும் கொடி இறக்கத்துடன் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirupati, Tirupati temple, Tirupati temple festival

    அடுத்த செய்தி