திருப்பதி அருகே உள்ள பேரூரில் இருக்கும் குன்று ஒன்றின்மேல் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலையானின் வளர்ப்பு தாயார் ஆன வகுளாதேவிக்கு கோவில் கட்டப்பட்டது. அதன் பின்னர் இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் அந்த கோவில் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டு வகுளாதேவியின் சிலை உடைக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த குன்றை உடைத்து அதிலிருந்து கிடைக்கும் கற்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இதனால் அந்த கோவில் முழுவதுமாக அழிந்து போனது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வகுளாதேவி குகைக் கோவிலை மீண்டும் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஏற்பட்டது.
ஆனால் அந்தப் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் கோவில் கட்டுவதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கோவிலை கட்டும் பணிகள் துவக்கப்பட்டன. ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டியின் நிதி உதவியுடன் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கோவிலுக்கு இன்று பகல் 11.15 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வகுளாதேவி கோவில் அமைந்துள்ள குன்றின் கீழ் இருக்கும் பகுதியில் தேவஸ்தான நிர்வாகம் கல்யாண மண்டபம், ஓய்வு விடுதிகள் ஆகிய உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.