முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வழங்குவதில் புதிய மாற்றம்... இதோ முழு விவரம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வழங்குவதில் புதிய மாற்றம்... இதோ முழு விவரம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது. நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, ”300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையில் ஆன தரிசன டிக்கெட் உட்பட ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர்,” ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த இயலாது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் விரைவில் துவங்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன” என்றார்.

மேலும், 300 ரூபாய் தரிசன டிக்கெட், இலவச தரிசன டோக்கன் ஆகியவை உள்ளிட்ட ஏதாவது ஒரு தரிசன டிக்கெட்டை வாங்கி இருக்கும் பக்தர்களும் நடந்து மலையேறும் போது அங்கு வழங்கப்படும் தரிசன டோக்கனையும் வாங்கி வருகின்றனர். இதனால் ஒரே பக்தர் ஒரே நாளில் இரண்டு வகையான தரிசன வாய்ப்புகளை பெறுகிறார். நிர்வாக அளவில் இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் திவ்ய தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்” என்றார்.

Also see... திருப்பதி மலையில் ஓடி கொண்டிருக்கும் இலவச பேருந்துகளில் மாற்றம்.. முழு விவரம்..!

மேலும் கடந்த மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 114 கோடி 29 லட்சம் ரூபாய் கடந்த மாதம் ஏழுமலையானுக்கு உண்டியல் மூலம் காணிக்கை வருமானமாக கிடைத்தது என்றும் தெரிவித்தர்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati