திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார், பொதுமக்கள் இலவசமாக திருப்பதிக்கு செல்ல பேருந்து சேவையை கடந்த 25ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த இலவச பேருந்து சேவையை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் இருந்து எம்.எல்.ஏ நந்தகுமார் கொடிசைத்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறியதாவது,
" திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளேன். அடுத்த 19 மாதங்கள் நான் இந்த பதவியில் இருப்பேன். அதுவரை வாரத்திற்கு 6 நாட்கள் திருமலைக்கு பொதுமக்கள் இலவச தரிசனம் செய்து திரும்ப என்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளேன்.
இதற்காகவே 12 பேர் பயணம் செய்யக்கூடிய வேன் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளேன். இந்த வாகனம் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது. மார்ச் 1-ந்தேதி முதல் வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து இந்த வாகனம் காலை 7:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்குள் வேலூர் திரும்பும்” என்றார்.
மேலும்,” திருப்பதி கோவிலில் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் திருமலை அன்னதான கூடத்தில் மதிய உணவுக்கு ஏற்பாடும் செய்யப்படும். வாகனத்தில் குறைந்த இடவசதி இருப்பதால் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இலவச தரிசன சேவைக்காக வேலூர் திமுக அலுவலகத்தில் முன்கூட்டியே பக்தர்கள் தங்களது ஆதார் விவரங்களை அளித்து பதிவு செய்துக்கொள்ளலாம். 300 ரூபாய் டிக்கெட்டில் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றுக் கூறினார்.
செய்தியாளர்: வேலூர் செல்வம்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.