ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி ஏழுமலையானை வழிபட 16 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு...

திருப்பதி ஏழுமலையானை வழிபட 16 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு...

திருப்பதி

திருப்பதி

tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதனால் அவர்கள அனைவரும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததால் அறைகளில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து வாரக்கடைசி வருவதால் அதிகமாக பக்தர்களின் வருகை இருந்தது. அதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்றைய நிலவரத்தின்படி திருப்பதி மலையில் இலவசமாக ஏழுமலையானை வழிபட பக்தர்கள் 16 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. திருப்பதி ஏழுமலையானை நேற்று 67, 511 பக்தர்கள் வழிபட்டனர். அவர்களில் 26, 948 பேர் தலைமுடி சமர்ப்பித்து மொட்டை போட்டுக் கொண்டனர்.

நேற்று ஏழுமலையானுக்கு 4 கோடியே 33 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் காணிக்கை வருமானமாக கிடைத்தது. ஏழுமலையானை இலவசமாக வழிபடுவதற்காக கவுண்டர்களில் டிக்கெட் வாங்காமல் சென்ற பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் 24 அறைகளில் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரத்தின்படி டிக்கட் இல்லாத இலவச தரிசனத்திற்கு 16 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை திருப்பதி மலையில் நிலவுகிறது.

செய்தியாளார்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Tirumala Tirupati, Tirupathi