முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சென்னையில் திருப்பதி தேவஸ்தானத்தின் 2வது கோவிலுக்கு மார்ச் 17-ம் தேதி கும்பாபிஷேகம்!

சென்னையில் திருப்பதி தேவஸ்தானத்தின் 2வது கோவிலுக்கு மார்ச் 17-ம் தேதி கும்பாபிஷேகம்!

சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்

சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்

Tirupati | சென்னையில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி கோவிலுக்கு மார்ச் மாதம் 17ஆம் தேதி கும்பாபிஷேகம் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் இன்று நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் உள்ள ஜி.என் செட்டி தெருவில் பழம்பெரும் நடிகை காஞ்சனா திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கிய நிலத்தில் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு மார்ச் மாதம் 17ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு நன்கொடையாளர்கள் 16 கோடி வழங்கிய நிலையில் தேவஸ்தானத்தில் இருந்து ரூ.6 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தானத்தின் சென்னை மற்றும் பாண்டிச்சேரி மண்டல தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. ஆந்திராவில் மேல்சபை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளன. எனவே தேவஸ்தான நிர்வாகம் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

Also see...

 

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் தேவஸ்தானத்தின் 2023- 24 நிதியாண்டு வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்றும் அப்போது தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Tirumala Tirupati, Tirupati