Home /News /spiritual /

திருப்பதியில் இந்த நாட்களில் விஐபி தரிசனங்கள் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் இந்த நாட்களில் விஐபி தரிசனங்கள் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி

திருப்பதி

Tirupati Devasthanam : கருட வாகன சேவை அடுத்த மாதம் 1ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirupati, India
    27-ம் தேதி முதல் அடுத்த மாதம் 6-ம் தேதி வரை பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன வசதி கிடையாது. நேரடியாக வரும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் புரோட்டா கால் அடிப்படையில் விஐபி பிரேக் தர்ஷன் அனுமதி அளிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இம்மாதம் 27ம் தேதி துவங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை அடுத்த மாதம் 1ம் தேதி இரவு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த முறை பிரம்மோற்சவ ஊர்வலம் கோவில் மாட வீதிகளில் நடைபெற உள்ளது. எனவே பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் திருப்பதி மலைக்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக ஒரு சில முடிவுகளை தேவஸ்தான நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி 27-ம் தேதி முதல் அடுத்த மாதம் 6-ம் தேதி வரை பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன வசதி கிடையாது. நேரடியாக வரும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் புரோட்டா கால் அடிப்படையில் விஐபி பிரேக் தர்ஷன் அனுமதி அளிக்கப்படும்.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் தரிசன அனுமதியும் பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி மலையில் மிகவும் குறைவான அளவில் மட்டுமே தங்கும் அறைகள் உள்ளன. அவற்றில் 50% தங்கும் அறைகள் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். மீதி இருக்கும் 50 சதவீத தங்கும் அறைகள் கவுண்டர்கள் மூலம் நேரடியாக பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

    கருட வாகன சேவை அடுத்த மாதம் 1ம் தேதி அன்று நடைபெற உள்ளது. எனவே கருட வாகன சேவையை கண்டு தரிசிப்பதற்காக 30-ம் தேதி முதல் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ALSO READ |  நமது தேசமே வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கடமைப்பட்டிருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம் 

    எனவே 30-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கி இருக்கும் நன்கொடையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆன்லைன் முறையிலோ அல்லது நேரடியாகவோ தங்கும் அறைகளை ஒதுக்கீடு செய்ய இயலாது. அறைகள் தேவைப்படும் பக்தர்கள் சாதாரண பக்தர்கள் போல் ஆன்லைன் முறையிலோ அல்லது கவுண்டர்களில் வரிசையில் நின்றோ அறை பெற்று கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tirupati, Tirupati brahmotsavam

    அடுத்த செய்தி