இனி லட்டு மட்டுமல்ல... திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முடிவு

திருப்பதி

திருப்பதியில் ஏழுமலையானின் தோளில் தவழ்ந்த மாலையின் வாசம் இனி நம் வீட்டு பூஜை அறையிலும் வீச உள்ளது.

 • Share this:
  திருப்பதியில் மலை மேல் உள்ள ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில், கோவிந்த ராஜ சுவாமி கோயில் என பல கோயில்களை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இங்குள்ள மூல மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்க தினமும் பல்லாயிரம் டன் எடையுள்ள மலர்களால் ஆன மாலைகள் சாத்தப்படுகின்றன. கடவுள்களின் சிலைகளை அலங்கரிக்கும் இந்த மாலைகள் பக்தர்களால் புனிதமானதாக கருதப்படுவதால் அவை பாதுகாப்பான முறையிலேயே அப்புறப்படுத்தப்படுகின்றன.

  Also Read : கொடைக்கானலில் கிளைமேட்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

  இந்நிலையில், இறைவனின் விக்ரகங்களை சூடி வரும் இந்த மாலைகளை பயன்படுத்தி ஊது பத்தி தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதேநேரம் பெங்களூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற தனியார் ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்று லாப நோக்கம் இன்றி தேவஸ்தான கோயிலில் பயன்படுத்தப்பட்ட மலர் மாலைகளை பயன்படுத்தி ஊது பத்தி தயாரித்து வழங்க முன்வந்துள்ளது.

  அவ்வாறு தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் திருப்பதி மலையில் உள்ள லட்டு கவுண்டர்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. அதன் விலை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

  Also Read : முதல்வன் பட பாணியில் ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை... நிர்வாகிகள் கலக்கம்

  இந்த சூழலில் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு கூடம் மூலமாக 115 வகையான பொருட்களை தயார் செய்ய மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதோடு மேலும் 70 வகையான பொருட்களை தயார் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திடம் தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: