முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதியில் மீண்டும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விற்பனை துவக்கம்...

திருப்பதியில் மீண்டும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விற்பனை துவக்கம்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

tirupati | திருப்பதி மலையில் மூடப்பட்டிருந்த கவுண்டரை நேற்று திடீரென்று மீண்டும் திறந்த தேவஸ்தான நிர்வாகம் தற்போது நாள் ஒன்றுக்கு 150 என்ற எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளிக்கும் நிலையில் அவர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கவுண்டர் திருப்பதி மலையில் கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகையிலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதுதவிர திருப்பதி விமான நிலையத்திலும் கவுன்டர் அமைத்து தேவஸ்தான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட் விற்பனை செய்து வருகிறது.

ஆன்லைன் மூலமும் இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இடையில் திருப்பதி, திருமலை ஆகிய ஊர்களில் செயல்பட்டு வந்த கவுன்டர்களை தேவஸ்தான நிர்வாகம் திடீரென்று மூடிவிட்டது. விமான நிலையத்தில் செயல்படும் கவுண்டரில் விமான மூலம் வரும் பக்தர்கள் மட்டுமே டிக்கெட் வாங்க முடியும் என்ற நிலையையும் தேவஸ்தானம் ஏற்படுத்தியது.

மற்ற பக்தர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் என்ற நிலை இதனால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி மலையில் மூடப்பட்டிருந்த கவுண்டரை நேற்று திடீரென்று மீண்டும் திறந்த தேவஸ்தான நிர்வாகம் தற்போது நாள் ஒன்றுக்கு 150 என்ற எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி மலையில் உள்ள கவுண்டரில் தினமும் 400 டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக பெற்று கொள்ளலாம் என்றும் திருப்பதி விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் தினமும் 100 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும், 750 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also see... திருப்பதி செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு...!

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் கவுண்டருக்கு ஆதார் அட்டையுடன் நேரில் வந்தால் மட்டுமே வழங்கப்படும். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மூலம் பக்தர்கள் ஸ்ரீவானி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati