திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதுவரை சுமார் தினமும் 2000 டிக்கெட் வரை ஆன்லைன் மற்றும் கவுண்டர் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில் சாதாரண பக்தர்கள் வசதிக்காக மாதவம் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்டர் மூடப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இனிமேல் திருப்பதி விமான நிலையத்தில் மட்டுமே ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் விநியோக கவுண்டர் செயல்படும் என்றும் விமானத்தில் வரும் பக்தர்கள் தங்களுடைய போர்டிங் பாஸ் மற்றும் பி என் ஆர் நம்பர் ஆகிய விபரங்களை குறிப்பிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை விமான நிலையத்தில் பெற்று கொள்ளலாம் என்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் பணியில் இருக்கும் தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களின் போர்டிங் பாஸ் ஆகியவை போன்ற விவரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் இனிமேல் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 500 என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று கூடுதலாக 250 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும், திருப்பதி விமான நிலையத்தில் 250 டிக்கெட்டுகள் தினமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதம் 12ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருப்பாவாடை கட்டண சேவை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் இன்று பதினொன்றாம் தேதி முதல் திருப்பதி மலையில் உள்ள கவுண்டரில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupathi