• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருப்பதியில் இவர்களுக்கு சிறப்பு தரிசனம் கிடையாது: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் இவர்களுக்கு சிறப்பு தரிசனம் கிடையாது: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி

திருப்பதி

திருப்பதியில் நேற்று 27,482 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 11,565 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். 3.73 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

  • Share this:
    கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்து வருகிறது. அவ்வாறு தரிசனம் செய்ய செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எடுத்து செல்ல வேண்டும் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் தேவஸ்தான நிர்வாகம் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது.

    அதன்படி நேற்று 27,482 பேர் திருமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். 11,565 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். 3.73 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது.

    இந்நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசன முறையானது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டது.

    மேலும் படிக்க... திருப்பதி இலவச தரிசன டோக்கன்... நவம்பர் மாதத்திற்கான ஆன்லைன் விநியோக தேதி அறிவிப்பு

    தற்போது வரை இந்த சேவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த சூழலில் இந்த சிறப்பு தரிசன முறைக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. அது உண்மை இல்லை. எனவே பக்தர்கள் அவற்றை நம்பி திருமலைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... திருப்பதி கோவில் குறித்து உங்களுக்குத் தெரியாத ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உண்மைகள்

    இம்மாதம் 22ஆம் தேதி நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளையும், 23ஆம் தேதி நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை தேவையான பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: