• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Tirupati: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவித்த முக்கிய செய்தி...

Tirupati: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவித்த முக்கிய செய்தி...

திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    திருப்பதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. பிறகு தொற்று பரவல் சற்று குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது.

    இதற்கிடையில் தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஆந்திராவின் சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் நேற்றைக்கு முந்தைய தினம் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இந்த தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கனமழையால் திருப்பதி நகரிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக 20 கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் திருமலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 4 கோடி ரூபாய் இழப்பு..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: