திருப்பதியில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளில் பங்கு பெறவும், அங்கபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டிருந்து.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருப்பதி மலையில் உள்ள பி.ஏ.சி.-1 ஹால் கவுண்டரில் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழக்கம்போல் இலவசமாக வழங்கப்படும். அங்க பிரதட்சண டிக்கெட் பெறும் பக்தர்கள மறுநாள் அதிகாலை ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம்
என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.