முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி மலைக்கு இந்த பொருள்களை எல்லாம் கொண்டு செல்லக்கூடாது.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதி மலைக்கு இந்த பொருள்களை எல்லாம் கொண்டு செல்லக்கூடாது.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Tirupati

Tirupati

Tirupati | திருப்பதி மலையில் பிளாஸ்டிக் தடையை மேலும் தீவிரப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது

  • Last Updated :

திருப்பதி மலையில் எளிதில் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றின் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சில நிறுவனங்கள் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை திருப்பதி மலையில் விற்பனை செய்வதற்கு என்று பிரத்யேகமாக தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன.

எனவே ஒரு லிட்டர் குடிநீரை 80 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. குடிநீரை பயன்படுத்திய பின் காலி கண்ணாடி பாட்டிலை திருப்பி கொடுக்கும் போது 50 ரூபாய் திரும்ப கொடுக்கப்படும்.

இந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கான தடையை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் எளிதில் மக்காத தன்மையுள்ள பிளாஸ்டிக் கவர்களை திருப்பதி மலையில் உள்ள வியாபாரிகள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.

பக்தர்களுக்கு பொருட்களை கொடுக்கும்போது எளிதில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் அல்லது காகித பைகளை மட்டுமே பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான அறிவிப்பை கடைகளின் முன் வைக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் பக்தர்கள் திருமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Also see... உலக தரத்தில் திருப்பதி ரயில் நிலையம் - அமைச்சர் அஸ்வினி யாதவ் தகவல்

top videos

    எனவே குடிநீர் பாட்டில்கள் மட்டுமே அல்லாமல் ஷாம்பூ, தலைக்கு தடவ பயன்படும் எண்ணெய் ஆகியவற்றை கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களையும் பக்தர்கள் இனிமேல் திருப்பதி மலைக்கு எடுத்து செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது...

    First published:

    Tags: Plastic Ban, Tirupathi, Tirupati