முகப்பு /செய்தி /ஆன்மிகம் / “ஒரு லட்டுதான்”... திருப்பதி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்..!

“ஒரு லட்டுதான்”... திருப்பதி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்..!

திருப்பதி லட்டு செய்ய ரெசிபி

திருப்பதி லட்டு செய்ய ரெசிபி

Tirupati | திருப்பதி மலையில் இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் இனிமேல் ஒரே நாளில் இரண்டு முறை இலவச லட்டு பெற இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர், ”மனிதர்களை அவர்களுடைய முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி தொழில்நுட்பத்தை தேவஸ்தானம் கடந்த 1ம் தேதி திருப்பதி மலையில் பரிசோதனை அடிப்படையில் நடைமுறை கொண்டு வந்தது.

திருப்பதி மலையில் தங்கும் அறையில் ஒதுக்கீடு செய்யும் கவுண்டர்கள், அறைகளை காலி செய்வதற்காக பக்தர்கள் பயன்படுத்தும் துணை விசாரணை காரியாலயங்கள் ஆகியவற்றில் உள்ள வெப் கேமராக்களில் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி அடிப்படையில் செயல்படுகின்றன.

இதனால் திருப்பதி மாலையில் தங்கும் அறைகளை ஒதுக்கீடாக பெரும் பக்தரே அந்த அறையை காலி செய்ய வேண்டும். அதை தவிர்த்து வேறு யாராவது அறையை காலி செய்தால் டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது” என்றார்.

மேலும் பேசியவர், தேவஸ்தானத்தின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் இடைத்தரகர்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலம் தங்கும் அறைகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கும் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட உள்ளது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, ”இதனால் ஆன்லைன் மூலம் அறைகளை முன்பதிவு செய்து அறைகளை பெற்று கொண்ட பக்தரே அந்த அறையை துனை விசாரணை காரியாலத்திற்கு நேரடியாக சென்று காலி செய்ய வேண்டும் . வேறு யாராவது அறையை காலி செய்தால் அந்த பக்தருக்கு டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது என்றார்.

திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் வழியாக இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டுக்கு உரிய டோக்கன் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச லட்டு டோக்கன் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க இலவச லட்டு டோக்கன் கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.

இதனால் ஒரே பக்தர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இலவச லட்டுக்கு உரிய டோக்கனை பெற இயலாது. மேலும் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டோக்கன்களை அங்கு பணியில் இருப்பவர்கள் வழங்கவும் இயலாது.

பக்தர் ஒருவர் தன்னுடைய ஆதார் அட்டையை சமர்ப்பித்து ஒரு முறை தங்குவதற்கு தேவையான அறையைப் பெற்றுவிட்டால் அதன்பின் 30 நாட்கள் சென்ற பின் மட்டுமே அறையை பெற முடியும்”  என்று அப்போது கூறினார்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati