ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஜுன் மாத சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு... டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு...

திருப்பதியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஜுன் மாத சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு... டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு...

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதி:ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான ஜூன் மாத முன்னுரிமை தரிசன டோக்கன்கள் இம்மாதம் 26ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான டோக்கன்ங்கள் இம்மாதம் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 26ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகிய பக்தர்கள் தங்களுக்கான தரிசனத்திற்கு உரிய டோக்கன்களை முன்பதிவு செய்து ஜூன் மாதம் இலவசமாக ஏழுமலையானை வழிபடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also see... திருப்பதியில் பெருமாளை இப்படிதான் வணங்க வேண்டுமாம்!

ஒரு நாளைக்கு ஆயிரம் டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் டோக்கன்கள் வெளியிடப்பட இருக்கும் நிலையில் அவற்றை பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tirupati