• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருப்பதி பிரம்மோற்சவம் 2021 : நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி பிரம்மோற்சவம் 2021 : நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

  • Share this:
    புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். பிரம்மாவும் சிவனும் இணைந்து திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடத்தினர் என்று பழங்காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

    நாளை கொடியேற்றம் நடக்க இருப்பதை முன்னிட்டு நேற்று வராஹசுவாமி விருந்தினர் மாளிகையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து வனத்துறை அலுவலர் சீனிவாசு ரெட்டி மற்றும் ஊழியர்களால் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

    Also Read : சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ஷீரடி கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

    இதை தொடர்ந்து பின்னர், கோவிலின் ரங்கநாய்குலா மண்டபத்தில் சேஷவாகனத்தின் மீது பாய் மற்றும் கயிறு வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வன ஊழியர்கள் வடமலை பேட்டையை சுற்றியுள்ள வயல்களில் வளரும் இந்த தர்பையை சேகரித்து திருமலைக்கு கொண்டுவந்து வெயிலில் ஒருவாரம் உலர வைத்து, சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறாக தயாரிக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: