ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் விழா.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

திருப்பதி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் விழா.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

மூன்றாம் நாள் பிரம்மோற்சவம் - சிம்ம வாகனம்

மூன்றாம் நாள் பிரம்மோற்சவம் - சிம்ம வாகனம்

Tirupati | திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் சிம்ம வாகன சேவை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

    ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் 27ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமிக்கு சிம்ம வாகன சேவை நடைபெற்றது.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை, இரவு ஆகிய வேலைகளில் கோவில் மாட வீதிகளில் நடைபெறும் சுவாமி ஊர்வலங்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை ஏழுமலையானின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது.

    சிம்மவாகன சேவையை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அவருக்கு திருவாபரண சமர்ப்பணம், தூப, தீப, நெய்வேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் மாடவீதிகளில் ஏழுமலையானின் சிம்மவாகன சேவை பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே நடைபெற்றது.

    அப்போது மாட வீதிகளின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து சுவாமியை கும்பிட்டனர். சாமி ஊர்வலத்தின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியவாறு சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் . இந்த காட்சி பக்தர்களின் கண்களை மெய் மறக்க செய்தது.

    Also see... திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஜீர்கள் மற்றும் ஜீர்களின் சீடர்கள் ஆகியோரின் திவ்ய பிரபந்த கானம் வேத பண்டிதர்களின் வேத கோஷம் ஆகியவை ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் செவிகளுக்கு இனிமை ஊட்டுவதாக அமைந்திருந்தன.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati brahmotsavam