ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி பிரம்மோற்சவம் முதல் நாள் விழா.. பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

திருப்பதி பிரம்மோற்சவம் முதல் நாள் விழா.. பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதி பிரம்மோற்சவம்

Tirupati | பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று, உற்சவரான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில், மாட வீதிகளில் எழுந்தருளினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமியை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

  திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா, 9 நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா, கொடியேற்றத்துடன் நேற்று மாலை தொடங்கியது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில், கருட கொடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கோவிந்தா... கோவிந்தா என முழக்கமிட பிரம்மோற்சவ விழா ஆரம்பமானது....

  இதையடுத்து, ஆந்திர அரசு சார்பில் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்துசென்று ஏழுமலையானுக்கு வழங்கினார்.

  Also see... திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!

  வழக்கமாக கோயிலின் மாட வீதிகளில் நடைபெறும் உற்சவம், கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகள், பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல், கோயிலுக்கு உள்ளேயே நடத்தப்பட்டது. தற்போது, நிலைமை சீரடைந்திருப்பதால், வெகு விமரிசையாக பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

  அதன்படி, பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று, உற்சவரான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில், மாட வீதிகளில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க, யானைகள், குதிரைகள் மற்றும் காளைகள் முன் செல்ல, நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடும் குழு வழிநடத்த, மாட வீதிகளில் மலையப்ப சுவாமி உலா வந்தார்.

  Also see... நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

  மாட வீதிகளின் இருமருங்கிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வழிபாடு நடத்தினர். பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை முதலமைச்சர் ஜெகன்மோகனும் வழிபட்டார். பின்னர், துலாபாரத்தில், எடைக்கு எடை சர்க்கரை கொடுத்து அவர் வேண்டுதலை நிறைவேற்றினார்.

  வரும் 5-ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் ஒன்றாம் தேதி கருடசேவை நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tirumala Tirupati, Tirupati brahmotsavam