முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி : ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு

திருப்பதி : ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு

பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு

பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு

Tirupati | கடந்த 27ஆம் தேதி துவங்கி 9 நாட்கள் நடைபெற்ற ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷவாகன சேவை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய வேலைகளில் கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட வாகன சேவை கடந்த ஒன்றாம் தேதி இரவு நடைபெற்றது. அன்றைய தினம் சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கருட வாகன சேவையை கண்டு தரிசித்தனர்.

இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோவில் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. மாலை பிரம்மோற்சவ துவக்க நாளன்று கோவில் தங்க கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட கொடி இறக்கப்பட்டது. அத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

பிரமோற்சவ துவக்க நாளான கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் நேற்று நான்காம் தேதி வரை 8 நாட்களில் 5,69,000 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர்.

Also see... திருப்பதி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள் விழா: இன்று சக்கர ஸ்நானம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

எட்டு நாட்களில் 24 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 20 கோடியே 43 லட்ச ரூபாயை கடந்து எட்டு நாட்களில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு கோவில் உண்டிகளில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இரண்டு லட்சம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலை முடி சமர்ப்பித்துள்ளனர்.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati brahmotsavam