முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதியில் மார்ச் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchanur, India

திருப்பதி ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் தினசரி 20,000 வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை மார்ச் மாதம் 300 ரூபாய் டிக்கெட் மூலம் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் நாளை காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான வெப்சைடில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see... நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

அதேபோல் மே மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்கபிரதட்ஷனம் செய்ய விரும்பும் பக்தர்கள் நாளை மதியம் 2 மணி முதல் இலவசமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati temple