முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்... இன்று ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்... இன்று ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி பாலாஜி

திருப்பதி பாலாஜி

Tirupati | மார்ச் மாத திருப்பதி தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் தினசரி 20,000 வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே முந்தைய மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை மார்ச் மாதம் 300 ரூபாய் டிக்கெட் மூலம் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான வெப்சைட்டில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see... திருப்பதியில் மீண்டும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விற்பனை துவக்கம்...

அதேபோல் மே மாதம் ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்ஷனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இன்று மதியம் 2 மணி முதல் இலவசமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupathi