திருப்பதியில் திடீரென இப்படி ஒரு ஆச்சரியம்... குவியும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது திருப்பதியில் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள வழிப்பாட்டு தலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி திருப்பதி வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்து வருகிறது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசக்க அனைத்து மாநில பக்தர்களுக்கும் வழங்கப்படும் இலவச டோக்கன் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக விற்கப்படும் 300 ரூபாய் கட்டணம், விஐபி, விவிஐபி மற்றும் கல்யாண உற்சாவம் ஆகியவற்றுக்கு மட்டுமே டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் திருப்பதிக்கும் வரும் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்து வந்தது.

    தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது திருப்பதியில் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 11-ம் தேதி மட்டும் திருப்பதி ஏழுமலையானை 27,323 பேர் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆறு மாதங்களில் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 14,897 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். உண்டியலில் 1.85 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

    Also Read : பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம்.. இலவச டோக்கன் நிறுத்தம் - தேவஸ்தானம் வேண்டுகோள்

    புரட்டாசி மாதம் நெருங்குவதாலும், தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தினசரி 2 ஆயிரம் டோக்கன்கள் என சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மற்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இலவச தரிசனம் டிக்கெட் கேட்டு வரவேண்டாம் என்று தேவஸ்தான்ம் போர்டு கோரிக்கை விடுத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: