Home /News /spiritual /

திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைனில் டோக்கன்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைனில் டோக்கன்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி

திருப்பதி

angapradakshinam in tirumala 2022: . ஜூன் 15ம் தேதி ((நாளை) ) காலை 10 மணிக்கு ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் என்ற அடிப்படையில் ஆன்லைனில் அங்கபிரதட்சண டோக்கன்கள் இலவசமாக வழங்கப்படும்.

    அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தாம் அறிவித்துள்ளது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

    எனவே இனிமேல். அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் பெற வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (நாளை) ஜூன் 15ம் தேதி காலை 10 மணிக்கு ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் என்ற அடிப்படையில் ஆன்லைனில் அங்கபிரதட்சண டோக்கன்கள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் படிக்க: திருப்பதி மலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 கி.மீ நீளத்திற்கு வரிசை.. இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம்.


    டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi

    அடுத்த செய்தி