Home /News /spiritual /

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்.. ஆன்லைன் சேவைகளுக்கான டிக்கெட் புக்கிங் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்.. ஆன்லைன் சேவைகளுக்கான டிக்கெட் புக்கிங் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருமலை

திருமலை

Tirupati online tickets: செப்டம்பர் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆன்லைன் சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியீடு.

    செப்டம்பர் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆன்லைன் சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியீடு.

    ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மஉற்சவம், ஊஞ்சல் சேவை,சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளில் பக்தர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் பங்கு பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கல்யாண உற்சவம்,கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை,சகஸ்ர தீபலன்கார சேவை ஆகிய கட்டண சேவைகளில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொள்வதற்கு தேவையான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www. tirupatibalaji.ap.gov.in  வெப்சைட்டில் அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம். கட்டண சேவைகளில் ஆன்லைன் மூலம் பங்கு பெற டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மற்றொரு நாளில் திருப்பதி மலைக்கு வந்து நேரடியாக ஏழுமலையான் தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்ரதட்சண பதிவிற்கான டிக்கெட்டுகள் நாளை - ஜூலை 20 முதல் தொடங்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati Devotees

    அடுத்த செய்தி