ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சந்திர கிரகணம் 2022 : திருப்பதி முதல் மீனாட்சி அம்மன் கோயில் வரை.. நடை சாத்தப்படும் கோயில்கள்!

சந்திர கிரகணம் 2022 : திருப்பதி முதல் மீனாட்சி அம்மன் கோயில் வரை.. நடை சாத்தப்படும் கோயில்கள்!

திருப்பதி

திருப்பதி

இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் 22 உப கோயில்கள் காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்படுகிறது.

    இன்று சந்திர கிரகணம், முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

    இதனால் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை 11 மணி நேரம் நடைசாத்தப்படுகிறது. மேலும் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று சந்திரகிரகணம்... தமிழகத்தில் பார்க்க முடியுமா? நேரம் என்ன? - முழு விவரம் (news18.com)

    இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் 22 உப கோயில்கள் காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிரகணத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை காலை 6.45 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

    ராமேஸ்வரம் கோயிலிலும் நண்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் எனவும் தீர்த்தம் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்தது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Lunar eclipse, Tirupati temple