Home /News /spiritual /

திருப்பதி செல்ல பக்தர்கள் ஆர்வம்.. ஜனவரி மாத தரிசன டிக்கெட்டுகள் 15 நிமிடத்தில் புக் ஆனது

திருப்பதி செல்ல பக்தர்கள் ஆர்வம்.. ஜனவரி மாத தரிசன டிக்கெட்டுகள் 15 நிமிடத்தில் புக் ஆனது

திருப்பதி

திருப்பதி

திருப்பதி இலவச தரிசன டிக்கெட்டுகளை 15 நிமிடத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் இன்று வெளியிட்டது. 

    திருமலை திருப்பதியில்  2022  ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டோக்கன்கள் இன்று  காலை 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும்.

    எனவே அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10,000 என்று எண்ணிக்கையிலும் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டது.

    Also Read:  குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா?.. இந்த செய்தியை மறக்காமல் படிங்க

    அதன்படி ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது. இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடுவது பற்றிய தகவல்களை அறிந்த பக்தர்கள் இன்று காலை முதலே அவற்றை முன்பதிவு செய்ய தயார் நிலையில் இருந்தனர்.

    இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5,000 டிக்கெட்டுகளையும் மற்ற நாட்களில் 10,000 டிக்கெட்டுகளையும் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது. மொத்த டிக்கெட்டுகளையும் பக்தர்கள் 15 நிமிடத்தில் முன்பதிவு செய்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Online, Tirumala Tirupati, Tirupathi

    அடுத்த செய்தி