Home /News /spiritual /

டிசம்பர் மாதம் திருப்பதி போறீங்களா.. இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு

டிசம்பர் மாதம் திருப்பதி போறீங்களா.. இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு

திருப்பதி

திருப்பதி

அடுத்த மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு. டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் டோக்கன்) நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட்டுகளை  திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதனை பக்தர்கள் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati Devotees, Tirupati laddu, Tirupati temple

    அடுத்த செய்தி