Home /News /spiritual /

திருப்பதியில் விரைவில் சாமி தரிசனம் தொடக்கம் - தேவஸ்தானம் எடுத்துள்ள அதிரடி முடிவுகள்

திருப்பதியில் விரைவில் சாமி தரிசனம் தொடக்கம் - தேவஸ்தானம் எடுத்துள்ள அதிரடி முடிவுகள்

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது. 

    திருப்பதியில் சமூக இடைவெளி நிபந்தனைகளைக் கடைப்பிடித்து பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏழுமலையான் கோவிலில் பக்தர்களை சாமி கும்பிட அனுமதிக்கலாம் என்ற க்ரீன் சிக்னல் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கிடைத்தால், திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களையும் திறந்து சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளில் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    கோவில்களை திறந்தாலும் பக்தர்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகளை கண்டிப்பாக செய்தே தீர வேண்டும். ஆகையால் கொரோனா காலம் தீரும் வரைகோவிலில் தினமும் 14 மணி நேரம் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கவும், ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் என்ற கணக்கில் பக்தர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரிசையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கவும், இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை தரிசனத்திற்கான நேரத்தை குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கவும், தினமும் 7000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    திருப்பதி, திருமலையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் தங்கும் அறைகளை இரண்டு பேருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யவும், அரசு அனுமதி கிடைத்தால் 17-ம் தேதிக்கு பின்னர் மூன்று நாட்கள் தேவஸ்தான ஊழியர்களை பரிசோதனை அடிப்படையில் சாமி கும்பிடுவதற்கு அனுமதிக்கவும், அதனைத்தொடர்ந்து 15 நாட்கள் திருப்பதி, திருமலை ஆகிய ஊர்களில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்களையும், பின்னர் சில நாட்கள் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை ஏழுமலையான் வழிபாட்டிற்கு அனுமதிக்கவும், அதன் பின்னர் சாமி தரிசனத்திற்காக வெளியூர் பக்தர்களை அனுமதிக்கவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், சாமி தரிசனம் வரிசைகள், ஏழுமலையான் கோவில் உட்பகுதி, லட்டு கவுண்டர், வராக சாமி கோவில் ஆகியவற்றில் சாமி கும்பிடுவதற்காக வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் செல்லும் வகையில் ஆறு அடி இடைவெளிவிட்டு ரேடியம் ஸ்டிக்கர்களை தரையில் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: Lockdown, Tirumala Tirupati

    அடுத்த செய்தி