முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி : மார்ச் மாதத்துக்கான கட்டண சேவை டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி : மார்ச் மாதத்துக்கான கட்டண சேவை டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு..!

திருப்பதி (FILE)

திருப்பதி (FILE)

Tirumala tirupati : திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான டிக்கெட்டுகள் நாளை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையானை வரும் மார்ச் மாதம் கட்டண சேவைகள் மூலம் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற தினசரி கட்டண சேவைகளில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த கட்டண சேவைகள் மூலம் மார்ச் மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான டிக்கெட்டுகள் நாளை மாலை 4 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.

அதேபோல் மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தான இணையதளமான www. tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்

First published:

Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati Devotees, Tirupati laddu, Tirupati temple