திருப்பதி தரிசனத்துக்கு முன்பதிவு செய்த டிக்கெட் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? - தேவஸ்தானம் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மே மாதம் மூன்றாம் தேதி வரை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி தரிசனத்துக்கு முன்பதிவு செய்த டிக்கெட் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? - தேவஸ்தானம் அறிவிப்பு..!
திருப்பதி
  • Share this:
ஆன்லைனில் கட்டண டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் மே மாதம் 31-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை வழிபடும் வகையில் கட்டண சேவை டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மே மாதம் மூன்றாம் தேதி வரை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை ஏழுமலையானை வழிபடுவதற்காக கட்டண சேவை டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் helpdesk@tirumala.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களுடைய வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோடு ஆகியவற்றுடன் தேவஸ்தானத்தை அணுகி முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கு உரிய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தேவஸ்தான தகவல் தொழில்நுட்பத்துறையினர் பரிசீலனை செய்து பக்தர்கள் செலுத்திய பணத்தை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமிFirst published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading