திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிப்பதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்திற்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் என 28 நாட்களுக்கு 3 லட்சத்து 36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் 30 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
இந்த நிலையில், இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வீதம் 2 லட்சத்து 80 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை பயன்படுத்தி பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதனிடையே, அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பின் திருப்பதியில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.