ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி தேவஸ்தானத்தின் தங்க இருப்பு 10,258 கிலோவாக அதிகரிப்பு... அதிநவீன ட்ரோன் எதிர்ப்பு கருவி வாங்க முடிவு

திருப்பதி தேவஸ்தானத்தின் தங்க இருப்பு 10,258 கிலோவாக அதிகரிப்பு... அதிநவீன ட்ரோன் எதிர்ப்பு கருவி வாங்க முடிவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த 2019 ஆம் ஆண்டு தேவஸ்தானம் வங்கிகளில் 13 ஆயிரத்து 25 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தது. இப்போது தேவஸ்தானத்தின் வங்கிக் கணக்கில் 15 ஆயிரத்து 938 கோடி ரூபாய் உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirupati |

இந்திய கடற்படை பயன்படுத்துவது போன்ற ட்ரோன் எதிர்ப்பு சாதனத்தை வாங்க பெல் நிறுவனத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி மலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வாங்கி திருப்பதி மலையில் பொருத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை பெல் நிறுவனத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று திருப்பதி மலையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் சர்வே

நடத்தியது. அப்போது அந்த நிறுவனம் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு சர்வே எடுத்தது. இந்த நிலையில் ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஏழுமலையான் கோவில் டாப் ஆங்கில் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

இது போன்ற சம்பவம் நடைபெற வாய்ப்பே இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் கூறி வந்தது. ஆனால் ஹைதராபாத் நிறுவனம் திருப்பதி மலையில் ட்ரோனை பறக்கவிட்டு சர்வே எடுத்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் திருப்பதி மலையின் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, கடற்படையில் பயன்படுத்துவது போன்ற ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வாங்கி திருப்பதி மலையில் பொருத்த பெல் நிறுவனத்துடன் தேவஸ்தான நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பக்தர்களின் உடைமைகளை கையாளுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

விமான நிலையங்களில் பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பக்தர்களின் உடைமைகளை கையாளும் நடைமுறை இந்தாண்டு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் திருப்பதி மலையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். 150 கோடி ரூபாய் செலவில் திருப்பதி மலையில் டாட்டா நிறுவனம் சர்வதேச தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய அருங்காட்சியாகம் ஒன்றை கட்டி கொடுக்க உள்ளது. அதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேவஸ்தானத்தின் 960 சொத்துக்கள் தொடர்பான வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். அந்த சொத்துக்களில் பரப்பளவு 7126 ஏக்கர் ஆகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேவஸ்தானம் வங்கிகளில் 13 ஆயிரத்து 25 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தது. இப்போது தேவஸ்தானத்தின் வங்கிக் கணக்கில் 15 ஆயிரத்து 938 கோடி ரூபாய் உள்ளது. தேவஸ்தானத்தின் தங்க இருப்பு 7,339 கிலோவில் இருந்து 10,258 கிலோவாக அதிகரித்துள்ளது. தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.

மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர்கள் சரணாலயம் ஆகியவற்றையும் நடத்தி வருகிறோம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகள் வாய்ந்த ஸ்விம்ஸ் மருத்துவமனை, பார்ட் மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றையும் ஏழைகளின் வசதிக்காக தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது என்று கூறினார்.

First published:

Tags: Tirumala Tirupati